×

கே.என்.நேரு பெருமிதம் திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் முக்கிய பிரமுகர்களிடம் ஆதரவு திரட்டினார்

திருச்சி, மார்ச் 20: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்து வருகிறார். அவருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் பிரசாரத்தின்போது அதிமுக செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரித்தார். இதுமட்டுமின்றி பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திட்டினார்.
இந்நிலையில் பிஷப் ஹவுஸ் சென்று கிறிஸ்தவ பாதிரியார்களை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது வேட்பாளருடன் மாநில எம்ஜிஆர் இளைஞரணி இணைசெயலாளர் சீனிவாசன், ஆவின் தலைவர் கார்த்திகேயன், அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா, அன்பழகன், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : KN ,Nehru ,Trichy ,East ,AIADMK ,Vellamandi Nadarajan ,
× RELATED அரசு போக்குவரத்து கழகம் சார்பில்...